ஹைதராபாத், புனித தலங்களான உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் கேரள மாநிலம் சபரிமலை ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குமிடம் கட்ட தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில நிதியமைச்சர் ஹரீஸ் ராவ் கூறியதாவது:
கேரள மாநிலம் சபரிமலை மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய புனித தலங்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.
வாரணாசி, சபரிமலை ஆகிய தலங்களில் தலா, 25 கோடி ரூபாய் செலவில் தெலுங்கானா பக்தர்கள் தங்குவதற்கு விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மாநில அரசின் ‘க்ருஷ லட்சுமி’ திட்டத்தின் கீழ் ஏழைகள் தங்கள் சொந்த நிலத்தில் வீடு கட்டிக் கொள்ள நான்கு லட்சம் பேருக்கு தலா, ௩ லட்சம் ரூபாய் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி விரைவில் துவங்கும். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆட்சிக் காலத்தில் ஏழைகள் வீடு கட்ட கொடுத்த ௪,௦௦௦ கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement