ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் பா.பெஞ்சமின் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புட்லூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் புட்லூர் ஆர்.சந்திரசேகர், கே.எஸ்.ரவிச்சந்திரன், கேஜிடி.கௌதமன், டி.பூங்கோவன், எம்.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் சக்தி ரமேஷ், பி.சந்திரன், இ.சாந்தி எட்டியப்பன், அஞ்சலி ஜெயபால், இளையா என்கிற சி.மோகனசுந்தரம் எம்.ஜெயசங்கர், ஏ.காவேரி அன்பு, பெருவை சி.சேகர், புட்லூர் சி.செந்தில், ஊராட்சி தலைவர் பி.சீனிவாசன், எஸ்.ஜீவா சுப்பிரமணி, வழக்கறிஞர் கே.விஜயகுமார், ஜெயம் தங்கமணி ஆகியோர் வரவேற்றனர். இந்த பொதுக் கூட்டத்தில முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் தலைமை தாங்கி ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகளை வாங்கினார்.

இதில் தலைமைக் கழக பேச்சாளர் அ.அ.கலீல் பாட்ஷா, திரைப்பட நடிகை பசி சத்யா, பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான என்.எஸ்.ஏ.மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் தி.ப.கண்ணன், கா.சு.ஜனார்த்தனம், சி.ஒய்.ஜாவீத் அகமது, பி.ஜெயபால், என்.எஸ்.ஜெகநாதன், ஜி.திருநாவுக்கரசு, ஜி.வைத்தியநாதன், சி.சார்லஸ், நேமம் ஊராட்சி தலைவர் என்.எஸ்.ஜெ.பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் இ.என்.கோசலராமன் நன்றி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.