காற்றின் தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான மாற்றம்!


இலங்கையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் குறித்த நேரத்தில் கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152ஆக பதிவாகியுள்ளது.

காற்றின் தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான மாற்றம்! | Colombo Air Quality Facemask In Sri Lanka

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் மிதமான மட்டத்தில் காணப்பட்ட மாவட்டங்கள்

எவ்வாறாயினும் நுவரெலியா, நீர்கொழும்பு, தம்புள்ளை, அம்பலாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் காணப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரத்தில் ஏற்பட்ட ஆபத்தான மாற்றம்! | Colombo Air Quality Facemask In Sri Lanka

காற்றின் மாசு சுட்டெண் 100க்கும் அதிகமாக இருந்தால், சிறுவர், முதியோர் மற்றும் சுவாசக்கோளாறு உடையோருக்கு ஆபத்தானது எனவும், அவ்வாறானவர்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.