Rajinikanth: 'அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகம் இருக்கு'… ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியில் ரஜினிகாந்த்!

முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பாரிஸில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை என்ற பெயரில புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து இந்து அறநிலயத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

Gautami: கவுதமியின் மகளா இவர்… அழகில் அம்மாவை அடித்துத் தூக்கிய சுப்புலட்சுமி!

இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்பட கண்காட்சியை இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அருமையான புகைப்படக் கண்காட்சி என புகழ்ந்தார்.

Meera Mithun, Vijay: ‘அவன் என்ன நடிச்சு கிழிச்சிட்டான்?’ விஜய்யை ஒருமையில் தாறுமாறாய் விளாசிய மீரா மிதுன்!

சேகர் பாபு அழைத்துக் கொண்டே இருந்தார், ஆனால் தான் படப்பிடிப்பில் இருந்ததால் தன்னால் வர முடியவில்லை என்று கூறிய ரஜினிகாந்த் சேகர் பாபு ரொம்பவே விசுவாசமானவர், அன்பானவர் என புகழாரம் சூட்டினார். மேலும் அவருக்கு பாட்ஷா போல் இன்னொரு முகம் உள்ளது என்றும் கூறினார் ரஜினிகாந்த். இதனைக் கேட்டு சேகர் பாபுவே சிரித்தார்.

Vijayakanth: கறுப்பா இருந்ததால் விஜயகாந்தை அவமானப்படுத்திய பிரபல நடிகை… அம்பலப்படுத்திய பயில்வான்!

பின்னர் முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனது இனிய நண்பரான ஸ்டாலினின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்றுதான் என்று கூறினார். மு.க. ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார் என்றால், அது மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் என்றும் அவர் நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Naresh, Pavithra Lokesh: 2 முறை விவாகரத்தான நடிகையை 4வது திருமணம் செய்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்!

பின்னர் பார்வையாளர் குறிப்பேட்டில், ‘Super Collection, What a memory’ என இந்த புகைப்பட கண்காட்சி குறித்து தனது கருத்தை எழுதினார் நடிகர் ரஜினிகாந்த். இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகர் யோகி பாபுவும் கண்டு ரசித்தார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.