இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணி புதிய சாதனை படைத்துள்ளது.
வங்கதேச அணி வெற்றி
ஷேரே பங்களா நேஷனல் மைதானத்தில் இன்று இங்கிலாந்து எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி விளையாடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 158 ஓட்டங்கள் குவித்தது.

வங்க தேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ஓட்டங்களையும், சாண்டோ ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும் சேர்த்து இருந்தனர்.
159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, முன்கள ஆட்டக்காரர்களான டேவிட் மாலன் 53 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 40 ஓட்டங்களும் குவித்தனர்.
இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறியதால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs England: 3rd T20i
A Glimpse of Bangladesh’s Batting ✨#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/WIZNTBTF5z
— Bangladesh Cricket (@BCBtigers) March 14, 2023
இதன் மூலம் இங்கிலாந்து அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
வரலாறு படைத்த வங்கதேச அணி
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, நடப்பு டி20 சாம்பியனான இங்கிலாந்து அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்து வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.
சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியிடம் ஒருநாள் தொடரை நழுவவிட்ட வங்கதேச அணி, டி20 தொடரில் தக்க பதிலடி வழங்கியுள்ளது.
