நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருது குறித்து விமர்சித்த தேசிய விருது நடிகை

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு என்கிற பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்கிற குறும்படத்திற்கு சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருந்து கிடைத்தது.

மொழி பேதம் இன்றி அனைவருமே நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவிற்கு கிடைத்த இந்த இரண்டு விருதுகளை குறித்து தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேசிய விருது பெற்ற பெங்காலி நடிகையான அனன்யா சட்டர்ஜி என்பவர் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து, இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

15 ஆண்டுகளாக பெங்காலியில் நடித்து வரும் அனன்யா சட்டர்ஜி 2010-ல் வெளியான அபோஹோமான் என்கிற பெங்காலி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். அப்படிப்பட்ட ஒருவர் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு நாட்டு பாடல் குறித்து நான் எதற்காக பெருமைப்பட வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்..? எல்லோரும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்..? நம்மிடம் உள்ள இசைத்தொகுப்பில் இருந்து அவ்வளவு சிறந்ததா இந்த பாடல் ? கோபத்தை தான் அதிகரிக்கிறது..” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் தேசிய விருது பெற்றபோது உங்களை யாரும் இப்படி விமர்சிக்கவில்லையே.. அப்படி விமர்சித்து இருந்தால் உங்களது மனநிலை எப்படி இருந்திருக்கும்.. எதற்காக இந்த பொறாமை எண்ணம் என்று பலர் சற்று நாகரீகமாகவும், சிலர் கடுமையாகவும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.