அறிமுக போட்டியிலேயே மிரட்டிய அவர் என் இனம்! அவுஸ்திரேலிய வீரரை வியந்து பாராட்டிய அஸ்வின்


அவுஸ்திரேலிய வீரர் முர்பியை தமிழக வீரர் அஸ்வின் வியந்து பாராட்டினார்.

டாட் முர்பி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இந்தத் தொடரில் டாட் முர்பி என்ற 22 வயது சுழற்பந்து வீச்சாளர் அவுஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.

டாட் முர்பி/Todd Murphy

skysports.com

அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரள வைத்தார். மொத்தமாக அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

பாராட்டிய அஸ்வின்

இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தொடர் குறித்து கூறுகையில், ‘நாதன் லயன் 20 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், அறிமுக வீரராக களமிறங்கிய டாட் முர்பி அவரை விட சிறந்த வீரராக செயல்பட்டார்.

இரண்டு விக்கெட்களில் இருந்தும் அவர் அபாரமாக பந்துவீசினார்.

டாட் முர்பி/Todd Murphy

@AFP Photo 

முர்பியின் பந்துவீச்சு துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தியது.

அவர் ஆஃப் ஸ்பின்னர் என்பதால் என்னுடைய இனத்தைச் சேர்ந்தவர். அதனாலேயே அவரை பற்றி அதிகம் பேசுகிறேன். அதேபோல் குணேமனும் சிறப்பாக பந்து வீசினார்’ என தெரிவித்துள்ளார். 

அறிமுக போட்டியிலேயே மிரட்டிய அவர் என் இனம்! அவுஸ்திரேலிய வீரரை வியந்து பாராட்டிய அஸ்வின் | Ashwin Praise Australian Spinner Murphy

skysports.com



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.