சென்னை: காவிரி கடைமடை பகுதிக்கு பாசன வசதியை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி, வெண்ணாறு கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார். கால்வாய்கள் தூர்வாருவதன் மூலம் 1,32,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
