பள்ளி மாணவர்கள் வேளாண்மையை அறிந்துகொள்ள ரூ.1 கோடியில் பண்ணைச் சுற்றுலா திட்டம்..!!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.

வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

காவிரி படுகை உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் காவிரி படுகை பெருந்திட்டம்- ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, உள்ளிட்ட 10 பொருள்கள் அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மறுகட்டமைப்பு; 27 சேமிப்புக் கிடங்குகளில் ரூ.54 கோடியில் மறுகட்டமைப்பு.

அதிக வரத்துள்ள 100 விற்பனை கூடங்களில் ரூ.50 கோடியில் கட்டமைப்பு வசதிகள் புதுப்பிப்பு.

காவிரி கடைமடைக்கு பாசன நீர்: தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் காவேரி வெண்ணாறு பகுதிகளில் வாய்க்கால்களை தூர் வாருவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு; பயன்பெறும் நிலப்பரப்பு : 1,32,000 ஏக்கர்.

வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்திப் பராமரிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு.

நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை.

பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்க மற்றும் பராமரிக்க 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

பனை மேம்பாட்டுத் திட்டம்; பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.

உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

ட்ரகன் ப்ரூட், அவகேடா, லிச்சி பழங்களை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

1000 ஹெக்டேரில், பேரீட்சை, அத்தி பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி – ரூ.2 கோடி ஒதுக்கீடு.

ஒவ்வொரு கிராமத்திலும் 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச் செடி தொகுப்பு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.

வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.