இந்திய கிரிகெட் ரசிகர்களுக்கு இது செம உற்சாகமான நியூஸ்..!!

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கு தான் ரசிகர்கள் அதிகம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்கு தான் அதிக செலவும், விளம்பரமும் செய்யப்படுகிறது. இளைஞர்களிடையே கிரிக்கெட் விளையாட்டு ஒரு எழுச்சியை உருவாக்கி உள்ளது. கபில்தேவ், அசாருதின், கங்குலி, சச்சின், சேவாக், தோனி, கோஹ்லி என அடுத்தடுத்து தங்களது ஆதர்ஷ வீரர்கள் மாறினாலும், இளைஞர்களை விளையாட்டை நோக்கி உற்சாகப்படுத்தியதில் இவர்களின் பங்கு அளப்பரியது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது.

அதில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.

உலக கோப்பையை வெல்லும் அணிகள் குறித்து ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை நடைபெறும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்றும் இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிக்காக ,சுமார் 12 இடங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மஷாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட் மற்றும் மும்பை. ஆகிய இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தொடரில் 46 நாட்களில் 48 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.