பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு


சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

பதுளை மாவட்டத்தின் சூப்பர் ஸ்டோர்களில் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு | Special Notice Regarding Packed Rice

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

இதேவேளை நாட்டில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை துறைமுகத்தில் சிறைபிடிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (25.03.2023) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“இந்த முட்டை கையிருப்புகளை விடுவிக்க அதிகாரிகள் இதுவரை தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

முதல் தொகுதி முட்டை

பொதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான விசேட அறிவிப்பு | Special Notice Regarding Packed Rice

அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி முட்டை கடந்த வியாழன் காலை நாட்டை வந்தடைந்தது.

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் இருப்பு வெளியிடப்பட உள்ளதுடன் அரிசிகளின் நிகர எடை விசாரணைகளுக்கு அதிகாரிகள் 3 நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும், அது தொடர்பான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.