பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை; பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்..


தனக்கு குழந்தை பிறக்கவேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூர சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், கொல்கத்தா நகர்த்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தில்ஜாலா பகுதியில் உள்ள அலோக்கின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு வயது சிறுமியின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர். உடல் ஒரு பைக்குள் இருந்தது. தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை; பக்கத்து வீட்டு குழந்தையை நரபலி கொடுத்த கொடூரன்.. | Man Kills A Neighbours Child Human Sacrifice

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார், வேலைக்காக கொல்கத்தாவுக்கு வந்தார். அவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், மந்திரவாதி ஒருவரின் அறிவுறுத்தலின்படி 7 வயதுப் சிறுமி பலி கொடுத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நரபலி கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்ற தந்திரிகன் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சடங்கு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மந்திரவாதி பீகாரைச் சேர்ந்தவர் என்றும் அவரைக் கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலோக் தனது மனைவிக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதால், அவர் மந்திரவாதியை அணுகியதாகவும், நரபலி கொடுத்தால் பிரச்னை தீரும் என அவர் கூறியதையடுத்து இவ்வாறு செய்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றவாளிகளை வெளியே விடக் கோரி உள்ளூர் தில்ஜாலா காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தடியடி நடத்தினர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.