புதுச்சேரி: புதுச்சேரி காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள், முக்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை தரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். போதைப் பொருளை தடுக்க குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் 60 எஸ்.ஐ., 26 ஓட்டுநர்கள், 500 ஊர்க்காவல் படை வீரர்கள் என காலி பணியிடங்கள் இவ்வாண்டுக்குள் நிரப்பப்படும் எனவும் கூறினார்.
