சென்னை: தனக்கு மாஸ் ஹீரோ அந்தஸ்த்தை வாரி வழங்கிய இயக்குநரின் படத்திலேயே நடிக்க முடியாது என அந்த பிரைட் நடிகர் மறுத்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இனிமேல் அந்த இயக்குநருடன் பிரைட் நடிகர் கூட்டணியே வைக்க மாட்டார் என்றும் இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதே இயலாத காரியம் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது போல இதெல்லாம் சகஜமப்பா என்கிற ரேஞ்சுக்கு அந்த இயக்குநர் அழைத்ததும் நடிகர் அவரது விழாவுக்கு சென்றிருக்கிறார்.
பந்தா காட்டுவதில்லை
டாப் நடிகரின் பாணியையே சமீப காலமாக மாஸ் நடிகரும் பிடித்துக் கொண்டு வேறு எந்த நிகழ்ச்சிக்கும் செல்வதை தவிர்த்து வருகிறார். ஆனால், பிரைட் நடிகர் அப்படி எல்லாம் இல்லை எங்கே அழைத்தாலும், இன்முகத்துடன் சென்று வருகிறார். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவருக்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம் இருக்கும் போதும், தகுந்த ஏற்பாட்டுடன் பல விழாக்களுக்கு சென்று வருகிறார்.

குழந்தைகளை பப்ளிசிட்டி பண்றாரு
ஒரு பக்கம் குழந்தைகள் மீது மீடியா வெளிச்சம் படக்கூடாது என நடிகர் நினைத்தாலும், மறுபக்கம் நடிகரின் மனைவி எங்கே சென்றாலும் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்று பப்ளிசிட்டி தேடி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கணவருடன் குழந்தைகளையும் ஆராய்ச்சி செய்யும் இடத்துக்கு அழைத்து போனது நடிகருக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவியின் சொல்லை தட்ட முடியவில்லை என்கின்றனர்.

அந்த இயக்குநரின் விழா
இந்நிலையில், அதை விட பெரிய விஷயமாக சமீபத்தில் எந்த இயக்குநரின் படத்தில் இருந்து நடிக்க முடியாது என அதிரடியாக அறிவித்து வெளியேறினாரோ அதே இயக்குநரின் அன்பு அழைப்பை எந்தவொரு காரணத்தையும் சொல்லி தட்டிக் கழிக்க மனமில்லாமல் அங்கே சென்று இருக்கிறார். மீண்டும் இவர்கள் இருவரையும் பார்த்த பல பிரபலங்களே வாயடைத்து போய் நின்றனர்.

ஃபியூஸ் போன முகம்
ஆனால், பிரைட் நடிகரின் முகம் அந்த நிகழ்ச்சியில் அவ்வளவு பிரைட்டாக இல்லை என்றும் ஃபியூஸ் போன பல்பாகவே அந்த நிகழ்ச்சியில் அவர் தென்பட்டார் என்றும் அதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அந்த விஷயம் தான் அவரை அப்படி அப்செட் ஆக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

அந்த நடிகரின் குடும்பம்
சமீபத்தில், இன்னொரு இயக்குநர் படத்தில் இருந்தும் பாதியில் நடிகர் வெளியேறிய நிலையில், அந்த படத்தில் இன்னொரு நடிகர் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் ஒதுக்கிய இயக்குநர் படத்திலும் சொந்தக்காரர் என்கிற முறையில் அந்த நடிகர் நடித்து வருகிறார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் அந்த நடிகரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டது தான் நடிகரை மனதளவில் லேசாக வருத்தமடைய செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

மிஸ் ஆனால்
தனது கடந்த படம் தியேட்டரில் வெளியாகியும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிதாக வெற்றி பெறாத வருத்தம் காரணமாகத்தான் அடுத்த படத்தை ரொம்பவே கவனமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார் அந்த நடிகர். மேலும், அந்த இயக்குநர் மீது பெரும் நம்பிக்கை வைத்து நடித்து வருகிறார். ஆனால், சிஜி காட்சிகள் எல்லாம் திட்டமிட்டப்படி வராமல் கார்ட்டூன் போல மாறி விட்டால் என்ன செய்வது என்கிற பயமும் நடிகருக்கு அதிகமாகவே இருப்பதாக கூறுகின்றனர்.