சென்னை : நடிகர் சூர்யா -இயக்குநர் ஹரி இணைந்து சிங்கம் படங்களின் பாகங்களை வெளியிட்டு ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது.
இவர்கள் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தற்போது இணைந்துள்ளனர்.
ஆனால் புதிய படத்திற்காக இவர்களது கூட்டணி அமையவில்லை. மாறாக இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோவை சூர்யா தற்போது திறந்து வைத்துள்ளார்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து திரையில் மாயாஜாலங்கள் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் சிறப்பாக அமைந்தது. ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா என்று சூர்யாவை கர்ஜிக்க வைத்த பெருமை ஹரியையே சேரும். அந்தப் படம் சூர்யாவின் கேரியர் பெஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் பாடல்களில் தேவிஸ்ரீ பிரசாத்தும் மாயங்களை செய்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட்.

மீண்டும் கூட்டணி
இவர்களது கூட்டணி தற்போது மீண்டும் சூர்யா 42 படத்தில் இணைந்துள்ளது. படம் பிரம்மாண்டமாக உருவாகிவரும் சூழலில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்த அதிகப்படியான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சிங்கம் படங்களை கொடுத்த சூர்யா மற்றும் ஹரி மீண்டும் இணைவார்களா என்றும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இந்தப் படத்தில் ஒரிஜினல் போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை சூர்யா ஏற்படுத்தியிருந்தார்.

கமர்ஷியல் அம்சங்கள்
இதேபோல காதல் காட்சிகளிலும் அழகான காதலனாக இதுபோன்ற காதலன் நமக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. அனுஷ்கா போதாது என்று ஒவ்வொரு பாகத்திலும் ஸ்ருதி, ஹன்சிகா என ஒவ்வொரு நாயகியை களமிறக்கியிருந்தார் ஹரி. இந்தப் படத்தில் காதல், காமெடி, ஆக்ஷன் என ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான சரியான மிக்சிங்கை பர்பெக்டாக கொடுத்திருந்தார்.

குட்லக் ஸ்டூடியோ துவக்கவிழா
இந்நிலையில் இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. படத்திற்கான கூட்டணியாக இல்லாமல் இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீத்தா ஹரியின் குட்லக் ஸ்டூடியோசை தற்போது சூர்யா துவக்கி வைத்துள்ளார். 40 வருட பாரம்பரியமிக்க குட்லக் ப்ரிவியூ திரையரங்கத்தை தற்போது குட்லக் ஸ்டூடியோவாக துவக்கியுள்ளனர். திரைத்துறை பணிகளான ரெக்கார்ட்டிங், டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை நவீன வசதிகளுடன் செய்யும் வகையில் இந்த ஸ்டூடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்டி சட்டையில் சூர்யா
இந்த நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் நடிகர் சூர்யா கலக்கலாக கலந்துக் கொண்டார். அவருடன் நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் ராஜசேகர், எஸ்பி முத்துராமன், ஆர்வி உதயகுமார் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னையில் முக்கிய அடையாளமாக இருந்த விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் திரையரங்கம் தற்போது ஸ்டூடியோவாக மாற்றப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க குட்லக் திரையரங்கம்
இந்தத் திரையரங்கில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, ஜானகி மட்டுமில்லாமல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் திரைப்படம் பார்த்து ரசித்துள்ளனர். பல திரை ரசிகர்களின் வாழ்வில் பல நினைவலைகளை இந்த திரையரங்கள் முன்னதாக உருவாக்கியுள்ளது. இந்த திரையரங்கத்தை இயக்குநர் ஹரி மற்றும் அவரது மனைவி ப்ரீத்தாவும் இணைந்து துவக்கி வைத்தனர்.