Rashmika Mandanna – ராஷ்மிகா மந்தனாவின் புதிய காதலர் இவரா?..

ஹைதராபாத்: Rashmika Mandanna Dating with Bellamkonda Srinivas (பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸுடன் ராஷ்மிகா காதல்?) நடிகை ராஷ்மிகா மந்தனா பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸை காதலிக்கிறார் என பேச்சு எழுந்திருக்கிறது.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

தெலுங்கில் கலக்கிய ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் சொதப்பும் ராஷ்மிகா மந்தனா

தமிழில் சொதப்பும் ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றதால் தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ஒரு ரவுண்டு வரமுடியவில்லை.

நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா

நேஷனல் க்ரஷ், எக்ஸ்ப்ரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா

தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்

ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருப்பதாகவும், இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இருவருமே மௌனம் சாதித்து வந்தனர். அதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லை ராஷ்மிகா மந்தனா காதலித்துவருவதாக பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகாவிடம் சுப்மன் கில் மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆம் என கண்ணடித்தபடி சிரித்துவிட்டு சென்றார். இதனையடுத்துதான் இருவரும் காதலிப்பதாக பேச்சு பலமாக எழுந்தது.

ராஷ்மிகா மந்தனாவின் புதிய காதல்?

ராஷ்மிகா மந்தனாவின் புதிய காதல்?

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும், ரஷ்மிகா மந்தனாவும் ஜோடியாக வந்தார்கள். அதை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்தார்கள். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றிலும் ஸ்ரீநிவாஸும், ராஷ்மிகாவும் ஜோடியாக கலந்துகொண்டார்கள். இதையடுத்து ராஷ்மிகா மந்தனா பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸை காதலிக்கிறாரா என சமூக வலைதளங்களில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.