பிரபல நடிகையை நம்ப வைத்து ஏமாற்றிய.. \"வாரிசு\" நடிகர்.. சில்லு சில்லாக உடைந்த உறவு.. வெளியான சீக்ரெட்

சென்னை: பிரபல நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழ தொடங்கி உள்ளன.

சினிமா உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தவர் அவர். அந்த நடிகர் சினிமா உலகில் முன்னணியில் இருந்த போதே அவருக்கு பெரிய பேரும் புகழும் இருந்தது.

அவரின் நடிப்பு தாண்டி, அவருக்கு இருக்கும் நல்ல குணம் காரணமாக, பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வந்தன. அதன்பின் அவரின் மகன் சினிமாவிற்கு நடிக்க வந்தார்.

மகன்

அவரின் மகன் சினிமாவில் தொடக்கத்தில் இருந்தே ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அப்பா சிறந்த நடிகர் என்றாலும் அவருக்கு ஓவர் ஆக்டிங் பிரச்சனையாக இருந்தது. ஆனால் அவரின் மகன் நடிக்க வந்த போது அப்படி இல்லை. அவரின் நடிப்பு அசாத்தியமாக இருந்தது. பார்த்ததும் வாவ் சொல்ல வைக்கும் அளவிற்கு அவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. முதல் படத்தில் இருந்தே ப்பா இப்படி ஒரு நடிகரா என்று சொல்லும் அளவிற்கு சிறப்பான படங்களை அந்த ஹீரோ கொடுத்து வந்தார். இதனால் அவரின் மார்க்கெட்டும் பெரிதானது.

மார்க்கெட்

மார்க்கெட்

இதையடுத்து அந்த நடிகர் பிரபல நடிகை ஒருவருடன் ஒரு படத்தில் நடித்தார். இந்த படத்தில் நெருக்கம் ஆனவர்கள்.. அதன்பின் இன்னொரு படத்திலும் ஒன்றாக நடித்தனர். இதன்பின் இரண்டு பேருமே காதலில் விழுந்துள்ளனர். நெருங்கி பழகி இவர்கள் ஒன்றாக வெளியே சுற்றவும் தொடங்கி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் அவர்கள் காதலில் விழுந்த விஷயம் மீடியாக்களில் கசிய தொடங்கி விட்டது. அதாவது இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மையாகிவிட்டது. ஆனால் இந்த காதலை அந்த ஹீரோவின் குடும்பம் ஒப்புக்கொள்ளவில்லை. முக்கியமாக அந்த பெண் வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர் என்பதால் ஹீரோவின் குடும்பம் கண்டிப்பாக மறுத்து உள்ளது.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இதையடுத்து அந்த ஹீரோவும் சில காலம் வீட்டில் பேசி பார்த்து இருக்கிறார். ஆனால் எவ்வளவு சொல்லியும் வீட்டில் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக அந்த ஹீரோ – ஹீரோயின் இடையிலான காதல் முறிந்து உள்ளது. இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அப்பாவின் அழுத்தம் காரணமாக இவர்களின் காதல் சில்லு சில்லாக உடைந்து நொறுங்கியது. இதையடுத்தே இவர்களின் காதல் பிரிவு செய்தி ஊடகங்களிலும் அப்போது வெளியானது. அப்பாவிற்கு இருந்த ஜாதி திமிர் காரணமாக இந்த திருமணம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருமணம்

திருமணம்

இதையடுத்து அதே ஹீரோ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது ஜாதியிலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் சினிமாவிற்கு தொடர்பு இல்லாதவர். இந்த நிலையில்தான் அவருக்கு குழந்தைகளும் பிறந்தன. தற்போது அவர் தனது வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறார். படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். ஆனால் அந்த ஹீரோயின் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த காதல் தோல்வியால் அவர் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அந்த ஹீரோ நம்மை ஏமாற்றிவிட்டார்.. இனி காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம்.. படத்தில் கவனத்தை செலுத்துவோம் என்று இருக்கிறாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.