பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான தொடர், இம்மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்திலும், மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
போட்டி அட்டவணை வருமாறு :
பயிற்சிப் போட்டி (ஒரு நாள்) – ஏப்ரல் 27 ஆம் திகதி
முதல் ஒருநாள் போட்டி – ஏப்ரல் 29 ஆம் திகதி
இரண்டாவது ஒருநாள் போட்டி – மே 2 ஆம் திகதி
மூன்றாவது ஒருநாள் போட்டி – மே 4 ஆம் திகதி
பயிற்சிப் போட்டி (ரி20) – மே 7 ஆம் திகதி
முதல் ரி20 போட்டி – மே 9 ஆம் திகதி
இரண்டாவது ரி20 போட்டி – மே 11 ஆம் திகதி
மூன்றாவது ரி20 போட்டி – மே 12 ஆம் திகதி