30,000 கோடி ரூபாய் குவிப்பு? வசமாக சிக்கினாரா உதயநிதி.! வானதி சீனிவாசன் வைத்த செக்..!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளரிடம் செல்போனில் பேசுவதை போன்ற ஆடியோ இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் அவர்களது மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். 10 கோடி 20 கோடி என சிறுக சிறுக ஓராண்டில் மட்டும் தோராயமாக 30 ஆயிரம் கோடி இருக்கும். இப்போது அது பிரச்சினையாக இருக்கிறது. இதை எப்படி கையாளுவது? எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் குரலில் பதிவாகியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் திமுகவின் சொத்து பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டார். ஒட்டுமொத்தமாக அந்த பட்டியலில் சொத்துமதிப்பானது ரூ.1,34,317 கோடி என கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியல் சாமானியர்களை வியக்க வைத்த நிலையில் அது வெறும் 10 சதவீதம் தான் என அரசியல் விமர்சகர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். மேலும், திமுக மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பை அடுத்த வீடியோவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

உங்க ஆட்டம் இங்க எடுபடாது… பாஜகவை வம்பிழுத்த உதயநிதி

இதனால் பாராளுமன்ற தேர்தல் வரை திமுக vs அண்ணாமலை என்ற அரசியல் பேட்டல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த குற்றசாட்டுகளை திமுக எவ்வாறு அணுகும்? அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் உண்மை இல்லை என்று பொதுமக்களுக்கு எவ்வாறு நிரூபிக்கும் என்ற சவால் நிலைதான் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், பழனிவேல் தியாகராஜன் பேசியதான ஆடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பாஜகவினர் பரவலாக ஷேர் செய்து அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த ஆடியோ பதிவை டிவிட்டரில் ஷேர் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், தமிழக முதல்வரின் குடும்பத்தினர்

ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பேசுவதாக கூறும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது இது குறித்து முதல்வர் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் நடந்து வரும் நிலையில் இந்த ஆடியோ விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.