​`எங்க ஆட்சியில மூட்டை மூட்டையா அரிசி, பருப்பு தூக்குனோம்!' – ரேஷன் கடையில் திமுக பிரமுகர் `அடாவடி'

​திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா டி.டி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகச் சாலையில் பணியாற்றுபவர் மேனகா (32)​.​ இந்த நுகர்வோர் பண்டகாலச் சாலையில் மொத்தம் 1,233 ​​ரே​​ஷன் கார்டுகள் இருக்கின்றன. சந்தைப்பேட்டை, நேருஜி நகர்​,​ வசந்தா நகர்ப் பகுதி​களைச் சேர்ந்த மக்கள் இங்கு ​​​​​ரேஷன்​ ​பொருள்களை வாங்குவது வழக்கம்.​ மேனகா நேற்று தனது பணியை செய்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியின் தி​.​மு​.​க அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர், மேனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்​. அது தொடர்பான வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அமீர் பாட்ஷா

அந்த வீடியோவில், “உன்னால் முடிந்ததைப் பார்… ​எங்கள் கருணாநிதி ஆட்சியில் ​மூ​ட்​டை மூ​ட்​டையாகவும், பெட்டிப் பெட்டியாக அரிசி பருப்பை அப்போது இருந்த நகர அன்வரை வைத்து தூக்கிச் சென்றோம்​.​ நானும் பெட்டிப் பெட்டியாக வீட்டுக்கு தூக்கிச் சென்றேன்​. ரெண்டு பாக்கெட்டுகள் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய்… நீ என்ன சேல்ஸ்வுமன். என்னிடம் விளையாடாதே… விபரீதம் ஆகிவிடும்” என்கிறார் தி.மு.க நிர்வாகி அமீர் பாட்ஷா.

இது குறித்து ​ரேஷன்​ கடை ஊழியர்களிடம் விசாரித்தோம். “அனைத்து ​ரேஷன்​ கடைகளிலும் இதுபோல அரசியல் பிரமுகர்கள் மிரட்டிப் பொருள்களைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. சம்பந்தப்பட்ட ​ரேஷன்​ கடையில் விற்பனையாளர் அந்த தி.மு.க பிரமுகரிடம், `உங்கள் அட்டைக்கு மட்டும் பொருள்கள் கொடுக்கிறேன். பிற அட்டைகளுக்கு தரமுடியாது’ எனக் கூறியிருக்கிறார்.

ரேஷன் கடை

அதற்கு அவர், `நான் சும்மாவா கேட்கிறேன்… பணம் தருகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். பணம் கொடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தானே பொருள்கள் தரமுடியும். கைரேகை பதிவு,​ரேஷன்​ அட்டை காண்பித்தால் மட்டுமே பொருள்கள் தருகிறோம். இதுபோன்றவர்களால்தான் அனைத்து தரப்புக்கும் முறையாக பொருள்கள் வழங்க முடியாமல் போகிறது. அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.