சென்னை : குலசாமி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததால் எழுந்துள்ள பிரச்சனைக்கு நடிகர் விமல் விளக்கம் கொடுத்துள்ளார்.
பில்லா பாண்டி படத்தை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி குலசாமி படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், விமல், தான்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள இப்படத்தை எம்ஐகே புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.
குலசாமி : இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில்ந நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட இயக்குநர் அமீர், குலசாமி படத்தின் நாயகன் விமல் மற்றும் நாயகி ப்ரோமோனுக்கு வந்து இருக்க வேண்டும் அவர்கள் வராதது வருத்தம் அளிக்கிறது. வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது.
காசு கொடுத்தால் போதுமா : கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களே சுற்றி சுற்றி ப்ரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். நான் சும்மா வருவேன், நடிப்பேன், காசு கொடுத்தால் போதும் என்று நடிகர் இருப்பது ஏற்புடையது அல்ல. கதையின் நாயகன் நாயகி இங்கு வந்திக்க வேண்டும் என்றார். மேலும், ப்ரமோஷனுக்கு வருவதற்கு விமல் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பணம் கேட்கவில்லை : இந்த விவகாரம் குறித்து விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய விமல், குலசாமி புரமோஷனுக்கு நான் பணம் கேட்டேன் என்று சொல்வது மிகவும் தவறான தகவல் தயாரிப்பாளரிடம் எந்த படத்தையும் கேட்கவில்லை. நான் நடிக்கும் தெய்வமச்சான் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் அன்றைய தினத்தில் தான் நடைபெற்றது. தெய்வமச்சான் படக்குழு ஒரு மாதத்திற்கு முன்னரே என்னிடம் சொல்லிவிட்டார்.
அமீரிடம் சொல்லிவிட்டேன் : குலசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டதால் என்னால், விழாவில் கலந்து கொள்ளமுடியவில்லை. இயக்குநரிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன் ஆனால், இசைவெளியீட்டு விழா வேலையில் பரபரப்பாக இருந்தால், அதை மேடையில் சொல்ல மறந்துவிட்டார்கள். இந்த காரணத்தை நான் அமீர் அண்ணாவிடம் தொலைபேசியில் சொல்லிவிட்டேன் என்றார்.