மும்பை, ‘மகிந்திரா’ நிறுவனம், அதன் ‘எக்ஸ்.யு.வி,. – 400’ மின்சார காரை, 100 சதவீத பசுமை ஆற்றலில் தயாரித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார், மகாராஷ்டிராவின் நாஸிக் பகுதியில் உள்ள இந்நிறுவன ஆலையில் தயாரிக்கப்படுகிறது.
பசுமை ஆற்றலில் தயாரிக்கப்படும் முதல் மின்சார காரான இது, 100 சதவீதம் தண்ணீர் வீணாக்காமலும் உருவாக்கப்படுகிறது.
இந்த வகை தயாரிப்பால், ஆண்டுதோறும், 1000 வீடுகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீரை வினியோகம் செய்ய முடியும்.
அத்துடன், ஆண்டிற்கு 2 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுவதுடன், 1 லட்சம் மரங்கள் நடுவதையும் ஈடு செய்வதாக விளங்குகிறது.
எக்ஸ்.யு.வி., – 400 காரின் முன்பதிவு ஆரம்பமான மூன்றே நாட்களில், 15 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளதாக மகிந்திரா தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம், கார்பன் சமநிலையை 2040க்குள் அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, 2027க்குள், 20 முதல் 30 சதவீத மகிந்திரா பயணியர் கார்கள், மின்சார கார்களாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement