''மாமா ‘stand up’ காமெடி பண்றார்''… கல்யாணராமனின் புது கண்டுபிடிப்பை கலாய்த்த ஷர்மிளா..!

ஆன்மீக சொற்பொழிவாற்றுவதாக கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் திருச்சி கல்யாணராமன் ”ஹரி up”-க்கு அர்த்தம் தெரியுமா என்று கூறியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது.

பிற மதங்களையும், மத நம்பிக்கையையும் சீர்குலைக்காமல் பேசுவதில்தான் ஆன்மீக சொற்பொழிவின் அர்த்தமே அடங்கியுள்ளது. ஆனால், திருச்சி கல்யாணராமன் ஒவ்வொருமுறையும் மற்ற மதங்களையும், சாதிகளையும் மேற்கோள்காட்டி தாழ்த்தி பேசுவது மத பிரச்சாரமே தவிர சொற்பொழிவு கிடையாது என்று விமர்சிக்கின்றனர்.

இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசும் திருச்சி கல்யாணராமன் ” ”ஹரி” என்றால் இருக்கு என்று அர்த்தம். கடவுள் இருக்கா என்று கேட்கக்கூடாது, ஹரி என்றாலே இருக்கு என்றுதான் அர்த்தம். இதை நாம் சொல்லவில்லை. வெளிநாட்டினர் சொல்கின்றனர். வேகமா வரணும் என்றால் ” ஹரி அப்” என்று கத்துவார்கள் ஆனால் ஏன் ”ஏசு அப்” என்று கத்துவதில்லை என்று சர்ச்சையாக பேசியுள்ளார் திருச்சி கல்யாணராமன்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து கலாய்த்து வரும் நிலையில் விசிக எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜியின் மனைவி டாக்டர் ஷர்மிளாவும் நகைச்சுவையாக ட்வீட் போட்டுள்ளார். ஷர்மிளாவின் ட்வீட்டில் ” மாமா ‘stand up’ காமெடி பண்றார்…” என்று ட்வீட் போட்டுள்ளார், அதற்கு பாஜகவினர் எதிர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு இதே திருச்சி கல்யாணராமன் ” சூரியன் காலையில் உதிப்பதற்கே ஒரு பிராமணர் பூஜை தான் காரணம் என்று கூறி வைரலானார்.

அதுபோல, பிராமணர் கையில் இருக்கும் புல்லும், சத்திரியர் கையில் இருக்கும் துப்பாக்கியும் ஒன்று.. துப்பாக்கியால் 50 பேரை சுடுவதற்குள் பிராமணன் மந்திரம் சொல்லி சுட்டுவிடுவான்” என்று இவர் கூறியிருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.