Dhanush: 40 வயதில் இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை..வெளிப்படையாக பேசிய தனுஷ்..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
திரைத்துறையில் திறமையும் கடின உழைப்பும் இருந்தால் போதும், சாதிக்கலாம் என நிரூபித்த பலருள் ஒருவர் தான் தனுஷ். நடிக்க வந்த புதிதில் தனுஷ் சந்திக்காத அவமானங்களே இல்லை எனலாம். 17 வயதில் ஹீரோவாக நடிக்க வந்த தனுஷ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இதனால் தனுஷ் மனஉளைச்சலுக்கு ஆளானாலும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.

தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த தனுஷிற்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் அமைந்தன. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார். இதையடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உண்டாக்கி முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க துவங்கினார் தனுஷ். எவ்வளவு பெரிய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் நடித்து பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார் தனுஷ்.

Silambarasan: சிம்பு செய்ததை என்னால் மறக்கவே முடியாது…உருக்கமாக பேசிய சசிகுமார்..!

அதில் இரண்டு தேசிய விருதுகளும் அடங்கும். இந்நிலையில் இடையில் தனுஷின் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார் தனுஷ். இவ்விரு படங்களும் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதன் காரணமாக தனுஷ் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்கயிருக்கின்றார். இதையடுத்து தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கவுள்ளார் தனுஷ்.

பா.பாண்டி என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போகும் புதிய படத்தை தானே தயாரிக்கிறார்.

தனுஷ்

இவ்வாறு தனுஷின் திரைப்பயணம் டாப் கியரில் சென்றுகொண்டிருக்க தற்போது அவருக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. CII DHAKSHIN சார்பாக தனுஷிற்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வாங்கிய தனுஷ், நான் என் திரைப்பயணத்தை துவங்கியபோது இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவே இல்லை. அதே போல 40 வயதாகும் நான் யூத் ஐகான் விருதை வாங்குவேன் என்றும் எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திரைபிரபலங்களும், ரசிகர்களும் தனுஷிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.