12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்களை விட மிகமிக கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சி.பி.எஸ்.இ தேர்வு ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் சென்னை மண்டல மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்துள்ள சி.பி.எஸ்.இ தேர்வு ஆணையர், இந்த பிரச்சனையை தீர்க்க பாட நிபுணர்களின் கருத்துக்களையும் […]
