மண் வாசனை மாறா வீடு! பழங்குடியினருக்கு மத்தியில் ஒரு வாழ்க்கை.. கனவை நனவாக்கிய டெல்லி தம்பதியினர்

புவனேஸ்வர்: பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்துக்கொண்டிருந்த தம்பதியினர் வேலையை துறந்து இயற்கையுடன் சேர்ந்து வாழ முயன்றுள்ளனர். தாங்கள் மட்டுமல்லாது இதனை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ecostay எனும் இயற்கை தங்கும் இடத்தை உருவாக்கியுள்ளனர்.

ஏறத்தாழ 57.51 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த பூமியில் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆபிசும் வீடும்தான். அதிலும் பெரும்பாலான நேரம் ஆபிஸில் கழிக்கப்படுகிறது. மீதமிருக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் சமாளிக்கவே நேரம் சரியாகிவிடுகிறது. இப்படி இருக்கையில் எங்கிருந்து இயற்கையை ரசிப்பது? அதற்கு பதிலாக எப்போதோ யாரோ எடுத்த ஒரு போட்டோவை மொபைலிலும், லேப்டாப்பிலும் வால்பேப்பராக வைத்துக்கொண்டு இயற்கை மீதான ரசனையை ஈடுசெய்து வருகிறோம்.

ஆரம்பத்தில் டெல்லியை சேர்ந்த இந்திராணி சக்ரவர்த்தி மற்றும் சௌமியா முகர்ஜி தம்பதியினரும் இதையேதான் செய்துக்கொண்டிருந்தனர். ஆனால் திடீரென ஒருநாள் இவர்களுக்குள் கேள்வி ஒன்று எழுந்தது. நாம் ஏன் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த நகரத்தில் உயிர்வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்? என்பதுதான் இந்த கேள்வி. இதனையடுத்து இவர்கள் டெல்லியிலிருந்து ஒடிசாவின் புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இங்குள்ள பழங்குடியின மக்களோடு சேர்ந்து வாழ்வது என முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் அது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. செய்கின்ற வேலையை விட்டுவிட்டு கையில் உள்ள சேமிப்பு பணத்தை கொண்டு காட்டுக்குள் வீடு கட்டிக்கொண்டால் எப்படி வருமானம் வரும்? ஆனால் வருமானத்தை விட வாழ்க்கை முக்கியமல்லவா எனவே இந்த தம்பதியினர் தங்கள் நோக்கத்தில் துணிந்து இறங்கினர். அப்போதுதான் ஒரு யோசனை உதித்திருக்கிறது. அதாவது வீட்டை கட்டி அதை சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான ஒரு ecostay எனும் இயற்கை தங்கும் இடமாக மாற்றினால் என்ன? எஎன்பதுதான் அந்த கேள்வி. எனவே இதற்கான முயற்சியை தொடங்கியுள்ளனர். இருக்கும் எல்லா சேமிப்பையும் ஒன்றுதிரட்டியுள்ளனர்.

The Ecostay house built in Bhubaneswar, Odisha has caught everyones attention

இதற்கிடையில் இரண்டாவது தடையும் வந்தது. அதாவது காட்டுக்குள் வீடு கட்ட அரசு தரப்பில் அனுமதி வாங்க வேண்டும். மற்றொருபுறம் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களிடம் நாங்கள் சுற்றுசூழலை மாசுப்படுத்தும் எந்த கட்டுமானத்தையும் உருவாக்கவில்லை என்பதை புரிய வைக்க வேண்டும். இதற்காக இந்த தம்பதியின் அதிக அளவு முயன்றுள்ளனர். ஒருவழியாக அவர்களுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமான பொருட்கள் கூட முடிந்த அளவு இயற்கையானதையே உபயோகப்படுத்தியுள்ளனர். வீடு காட்டு சூழலுக்கு ஏற்ப தயாராகி வந்துள்ளது. ஆனால் மற்றொரு சிக்கல் இப்போதுதான் தலை தூக்கியுள்ளது.

இவர்கள் வீடு கட்ட தேர்ந்தெடுத்த பகுதி யானைகள் உலாவும் பகுதியாகும். எனவே இங்கு வீடு கட்டுவது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று யோசித்திருக்கின்றனர். இதனால் கட்டுமானம் நிறுத்தப்பட்டு யானைகள் தொந்தரவு செய்யமுடியாத வண்ணம் சிறப்பான உயரமான கட்டுமானத்தை உருவாக்க திட்டமிட்டனர். ஆனால் அந்த கட்டுமானத்திற்கு போதுமான நிதி கிடைக்கவில்லை என்பதால் பாதியில் கைவிடப்பட்ட கட்டுமானத்தையே மீண்டும் கட்டியெழுப்ப முடிவு செய்தனர். அதன்படி எளிமையாகவும், தேவைக்கு ஏற்பவும் சிறிய வீடு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. காட்டுக்கு நடுவில், பழங்குடியினர் மக்கள் மத்தியில் கட்டப்பட்ட வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனால் இதன் பின்னர்தான் ரியல் சவால் தொடங்கியது. அதாவது ஃபானி புயல் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒடிசாவை கடுமையாக தாக்கியது. இந்த புயலில் இவர்கள் கட்டிய வீடும் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் மீதமிருந்து சேமிப்பை கொண்டு வீடு மீண்டும் கட்டி முடிக்கப்பட்டது. இங்குள்ள பழங்குடியின பெண்களுக்கு வீட்டை பராமரிப்பது தொடர்பான வேலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு குறிப்பிட்ட அளவில் பெண்கள் இந்த வீட்டை பராமரிக்க பணியமர்த்தப்பட்டார்கள். இப்படியாக ஒரு 6 மாதங்கள் வரை எந்த பிரச்னையும் இன்றி சென்றுக்கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகள் முன்பை போன்று இல்லையென்றாலும் கூட ஓரளவுக்கு ஆட்கள் வந்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

இதன் பின்னர் இவர்கள் சந்தித்த சவால்தான் மிகவும் கொடுமையானது. அதாவது கோவிட் லாக்டவுன். இந்த லாக்டவுனில் சுற்றுலா விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதில் இவர்கள் கட்டியிருந்த Svanir Wilderness Ecostay விடுதியும் மூடப்பட்டது. சில மாதங்கள் வரை லாக்டவுன் அகற்றப்படாமலும், அதன் பின்னர் லாக்டவுன் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் சுற்றுலா விடுதிகளுக்கான அனுமதி மேலும் சில மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த சவாலை சமாளிக்க குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் இந்திராணி சக்ரவர்த்தி மற்றும் சௌமியா முகர்ஜி தம்பதியினர் நிதி திரட்ட தொடங்கினர்.

அதனை கொண்டு இந்த வீட்டில் பணியாற்றும் பழங்குடியின பெண்களுக்கு கொரோனா காலத்திலும் ஊதியம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு பக்கபலமாக இருந்தது சௌமியாவின் தந்தை ஜி.பி.முகர்ஜிதான். இவர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். தன் வாழ்நாளில் பல்வேறு இடங்களை பார்த்த அவருக்கு ஒரு கட்டத்திற்கு பின்னர் வாழ்க்கை சலித்துவிட்டது. எனவே ஓய்வெடுக்க ஒரு வீட்டை இயற்கையான பகுதியில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்துதான் இந்திராணி சக்ரவர்த்தி மற்றும் சௌமியா முகர்ஜி தம்பியினர் இந்த விஷயத்தில் சீரியஸாக இறங்கினர்.

மழைநீர் சேகரிப்புடன் கட்டப்பட்ட இந்த வீட்டினுள் உள்ள பொருட்கள் அனைத்தும் பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பொருட்களை கொண்டே தயாரித்துள்ளனர். எனவே இந்த வீட்டை பார்த்தால் முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். தற்போது இந்த வீட்டிற்கு இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். என்ன மக்களே நாமும் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோமா?

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.