Trisha:பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2க்கு த்ரிஷாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Trisha salary for Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க குந்தவை த்ரிஷாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

​பொன்னியின் செல்வன் 2​மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் 2022ம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
​த்ரிஷா​பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்ற பிறகு த்ரிஷா தன் சம்பளத்தை ரூ. 4 கோடியாக உயர்த்தியாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொன்னியின் செல்வன், அதன் இரண்டாம் பாகங்களில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 5.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். முதல் பாகத்திற்கு ரூ. 2.5 கோடியும், இரண்டாம் பாகத்திற்கு ரூ. 3 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

​சம்பளம்​குந்தவை தான் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு வெறும் ரூ. 5.5 கோடி தானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இரண்டாம் பாகம் ரிலீஸாகவிருக்கும் நிலையில் அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் த்ரிஷா. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமியுடன் சேர்ந்து பல்வேறு நகரங்களில் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்.
​டிரெண்ட்​பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளுக்கு த்ரிஷா மிகவும் அழகாக வருகிறார். அவரின் உடை, மேக்கப், ஹேர்ஸ்டைல் எல்லாம் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இதனால் ட்விட்டரில் தினமும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. முன்னதாக பொன்னியின் செல்வன் பட விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டபோதும் ட்விட்டரில் தினமும் டிரெண்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.

​Trisha: த்ரிஷாவுக்கு அப்போ நடந்துச்சு, இப்பவும் நடக்குது: அவர் ராசி அப்படி

​திருமணம்​பொன்னியின் செல்வன் 2 பட விளம்பர நிகழ்ச்சிகளில் த்ரிஷா மேடை ஏறியதுமே திருமணம் எப்பொழுது என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள். உயிர் உங்களுடையது என வந்தியத்தேவன் ஸ்டைலில் பதில் அளித்து வருகிறார் த்ரிஷா. இந்நிலையில் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுபோனது ஏன் என அவரின் அம்மா உமா கூறியதாக ஒரு தகவல் வெளியானது.

​Trisha: த்ரிஷாவின் திருமணம் நின்றது ஏன்?: அம்மா உமா சொன்ன உண்மை

​லியோ​பொன்னியின் செல்வன் 2 படத்தை விளம்பரம் செய்யச் செல்லும் இடங்களில் எல்லாம் த்ரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்கிறார்கள் விஜய் ரசிகர்கள். லியோ பற்றி வாய் திறக்கக் கூடாது என லோகேஷ் கனகராஜ் த்ரிஷாவிடம் கறாராக கூறியிருக்கிறாராம். அதனால் லியோ படப்பிடிப்பு நன்றாக செல்கிறது. உங்களின் தளபதி நன்றாக இருக்கிறார். படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகும் என்று மட்டும் கூறி வருகிறார் த்ரிஷா.Leo: ஆர்டர் போட்ட லியோ லோகேஷ் கனகராஜ்: பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ‘குந்தவை’த்ரிஷா​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.