மூணாறு: போடிமெட்டு அருகே திருமண கோஷ்டியினர் பயணித்த வேன் விபத்தில் சிக்கி உறவினர்கள் பலியானதால் நேற்று நடக்க இருந்த திருமணம் தடைபட்டது.
கேரள மாநிலம் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் மேலபாலாமடையைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்கவிருந்தது.
இதற்கு நேற்று முன்தினம் மேலபாலாமடையில் இருந்து பெண் அழைத்து வரப்பட்டார். அவர் காரில் வந்த நிலையில் உறவினர்கள் வேனில் வந்தனர்.
அந்த வேன் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து ஏலத் தோட்டத்தினுள் தலை கீழாக கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேர் பலியாகினர். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்பதால் நேற்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement