
சமந்தாவின் 'இன்ஸ்டா ஸ்டோரி' பதிவுகள் யாருக்காக?
சென்னையைச் சேர்ந்த சமந்தா, தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தனது முதல் படக் கதாநாயகனான நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்தும் விட்டார்.
அவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இருவருமே அதைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் இதுதான் காரணமாக இருக்குமோ என சமூக வலைத்தளங்களில் இருவரது ரசிகர்களும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விதத்தில் எதையாவது பதிவிட்டு வருவார்கள்.
இந்நிலையில் சமந்தாவின் நேற்றைய மற்றும் இன்றைய இன்ஸ்டா ஸ்டோரி பதிவுகள் 'கருத்துப்' பதிவுகளாக அமைந்து யாருக்கோ எதையோ சொல்வது போல் அமைந்துள்ளது. முதல் பதிவில், நிகோலா டெஸ்லா சொன்ன “நாம் அனைவரும் ஒருவரே. ஈகோ, நம்பிக்கை, பயம் ஆகியவையே நம்மைப் பிரித்தது,” என்றும் அடுத்து இன்றைய பதிவில், சைக்கிளிலிருந்து கீழே விழுந்த ஒரு குட்டிப் பையன், அதைக் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து நடனமாடும் வீடியோவுடன், “வாழ்க்கை உங்களுக்கு சவாலா அமையும் போது, இதுதான் உங்களது ரியாக்ஷனாக இருக்க வேண்டும்,” என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தங்களது பிரிவு குறித்து நாகசைதன்யா பேசியதற்காக சமந்தா இப்படி பதிவிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் வருகிறது.