இலங்கை இராணுவப் படையினரால் முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இரத்த தானம்

நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 120க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு … Read more

12, 13 வயது குழந்தைகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்த தமிழக அரசு! ஆளுநரால் சிக்கலில் சிக்கிய இறையன்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி நேற்று பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்தார். அவரின் பேட்டி ஆளும் தமிழக அரசை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆளுநரின் பேட்டிக்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து … Read more

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசிய 6 பேர் பிடிபட்டனர்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானாவின் செகந்திராபாத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தே பாரத் ரெயில் சென்றது.பீதாபுரம்-சமர்லகோதா இடையே அந்த ரெயில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அதன் மீது கல்வீசி தாக்கினர். அதில் ரெயிலின் சில கண்ணாடி ஜன்னல்கள் சேதமடைந்தன. உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் கல் வீசியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அந்த வந்தே பாரத் ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், … Read more

Tamil News Live Today: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு… தலைமைச் செயலாளருக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

தமிழக தலைமை செயலாளர் இறையன்பு-க்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகைக்கு ஆளுநர் ரவி பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் பேசுகையில், “சட்டமன்றத்தில் எனது உரையில் கோயில்களைச் சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் பாராட்ட வேண்டும் என அரசு விரும்பியது. ஆனால் HR & CE- ன் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022-ல் என்ன நடந்தது என்பதை … Read more

கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் கோலாகலம்

மதுரை: கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் பரவசத்துடன் முழங்க பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று அதிகாலை 5.52 மணிக்கு இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியானில் அழகர் எழுந்தருளினார். அழகர்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடிக்கொள்ளவும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் … Read more

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோவாவில் தொடங்கியது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியா வருகை

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ நேற்று இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. … Read more

புதுசா EB கனெக்சன் வாங்கணுமா? இதோ புது ரூல்ஸ்… டைம்க்கு வரலனா இழப்பீடு… வருகிறது ஹேப்பி நியூஸ்!

தமிழகத்தில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை மாநில அரசு தன் வசம் வைத்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் இரண்டு விதமான துணை அமைப்புகள் இருக்கின்றன. அவை, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) ஆகும். திருச்சி – மின்சார வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் புதிய மின் … Read more

Rajini: ஜெயிலர் ரஜினியை பார்த்து தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்..! வைரலாகும் ட்வீட்..!

அதிகம் விற்பனையாகும் லேப்டாப்ஸ் மற்றும் ஸ்பீக்கர்கள் மீது 60% வரை தள்ளுபடி பெறுங்கள்- இப்போதே ஷாப்பிங் செய்யுங்கள் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் துவங்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் தான். மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் … Read more

ஜப்பானுடனான உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை திட்டம்!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் கிரிக்கெட் அணி ஒன்றை, இலங்கை, ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது. ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையில் வளர்ந்து வரும் அணி ஒன்று, 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் என்று சிறிலங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது, இலங்கை வளர்ந்து வரும் அணி ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐந்து 20க்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஜப்பான் தேசிய … Read more

முதல் முறையாக இணையும் ஜிவி பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ்! வெளியானது டைட்டில்!

‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷுடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.