சாய்தமிழ் ஒரு பாடி பில்டர். ‘சார்பட்டா பரம்பரை’ மீரான் என்றால் எல்லோரும் அறிவார்கள். செலிபிரிட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஜிம் பாயாகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தின் பர்சனல் பாடிகார்டாக இருந்திருக்கிறார். சாமி, விருமாண்டி என பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவரை ‘பூலோகம்’ கல்யாணகிருஷ்ணன் அடையாளம் கண்டு உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொண்டார்.

ஜனநாதன் தன் கதைவிவாதக் குழுவில் வைத்துக்கொண்டார். ரஞ்சித், ‘சார்பட்டா பரம்பரை’யில் மீரான் ஆக்க, வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்தது. அடுத்தடுத்து விஜய்சேதுபதி, ஜெயம் ரவிக்கெல்லாம் வில்லனாகும் அளவுக்கு பிஸியாகிவிட்டார் மனிதர். இப்போது மாமன்னன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சாய்தமிழின் காதல் ஒரு சுவாரஸ்ய எபிசோடு. தன் வாழ்க்கையைப் பற்றி, சினிமாவைப்பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார் சாய்தமிழ்! முழு