எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த கே.என்.நேரு: சேலத்தை பிடிக்கப் போவது யார்?

உடல்நிலை சரியில்லாத நிலையிலேயே எடப்பாடி பழனிசாமி ஓய்வில் இருப்பதாகவும், அதனாலே நிர்வாகிகளைக் கூட பார்க்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் நேற்று அவர் எடப்பாடி தொகுதியை சுற்றி வந்தார். ஏன் திடீரென தொண்டர்களை, சொந்த தொகுதி மக்களை ஆர்வமுடன் சந்திக்கிறார் என்று விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

திமுகவுக்கு ஏமாற்றம் தந்த கொங்கு!திமுக 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த போதும் கொங்கு மண்டலம் இந்த முறையும் கை கொடுக்கவில்லை. அதிமுக கௌரவமான தொகுதிகளை கைப்பற்றியதற்கும் கொங்கு மண்டலம் தான் முக்கிய காரணம். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10இல் அதிமுக கூட்டணியும் 1இல் மட்டும் திமுகவும் வெற்றி பெற்றன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறவில்லை.
ஸ்டாலின் களம் இறக்கிய தளபதிகள்!இதனாலே அந்த இரு மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து திமுக பக்கம் மக்களை ஈர்க்கும் வேலைகளை ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே செய்யத் தொடங்கினார் ஸ்டாலின். கொடுக்கும் பணியை பிரம்மாண்டமாக செய்து முடிக்கும் கே.என்.நேருவுக்கும், செந்தில் பாலாஜிக்கும் முறையே சேலம், கோவை மாவட்டப் பணிகள் சென்றன. இருவருமே தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
சேலத்தில் திமுக – வேகம் காட்டும் கே.என்.நேருமக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் முதல்வரின் கவனம் மீண்டும் கொங்கு மண்டலத்தை நோக்கி திரும்பியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் திமுக வலுவாக கால் ஊன்றும் வேலைகளை கே.என்.நேரு செய்துள்ளார்.
சேலத்தில் நலத்திட்ட உதவிகள்முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடந்த வாரம் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் தொகுதிகளில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 35,500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் எடப்பாடி பகுதியில் இருந்தே அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.
யாருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு?​​
கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மனம் மாறி பாதை மாறுகிறார்கள் என்பது எடப்பாடி பழனிசாமியை தொந்தரவு செய்துள்ளது. அதனாலே உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுக்க பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணமா, முதல்வர் ஸ்டாலினின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எது மக்களிடையே தாக்கத்தை வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய மக்களவைத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.