விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஆரவாரமாக இந்தப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர விட்டன. இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர். இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யும், சென்சேஷனல் இயக்குனருமான லோகேஷ் கனகராஜும் இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதே, அந்தப்படத்தின் ஹைப்பை பல மடங்கு எகிற செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்றது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் அண்மையில் வெளியான பர்ஸ்ட் சிங்கிள் ‘நா ரெடி’ பாடலை எழுதிய லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் விஷ்ணு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘லியோ’ படத்தின் இண்டர்வேல் காட்சி குறித்து பேசியுள்ளார். ‘விக்ரம்’ படத்தில் கமல் சாருக்காக வைச்ச இடைவேளை காட்சி அடுத்த பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு பேசுற மாதிரி இருக்கும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பரிட்சயம் ஆச்சு.
அந்த வகைல நீங்க எதிர்பார்க்குற இண்டர்வெல் ‘லியோ’ படத்துல இருக்காது. முழுசாவே வித்தியாசாமாக இருக்கும். இதை விஜய் சார் ஒத்துக்கிட்டதே ரொம்ப பெரிய விஷயம். கேட்டுட்டு சூப்பரா இருக்குயா. பண்ணலாம் சொன்னாரு. ஆடியன்ஸ்க்கு புது விதமான அனுபவமா இருக்கும் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எக்க்ச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
Bose Venkat: ஒரே நாளில் சகோதரி, சகோதரனை பறிகொடுத்த பிரபல நடிகர்: கண்ணீரில் குடும்பம்.!
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். இந்தப்படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் தனது பாணியில் இயக்கி வருகிறார் லோகேஷ். காஷ்மீரில் ஒரு மாதத்திற்கு மேலாக ‘லியோ’ படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்தில் கேஜிஎப் வில்லன் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Maamannan: ‘மாமன்னன்’ படத்தை பார்த்த கமல்: வெளியான முதல் விமர்சனம்.!