சென்னை டூ திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே அதிவேக ரயில் பயணம் என்ற நினைவு தான் இந்தியர்கள் பலருக்கும் வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு வரிசையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்து வருகிறது. இதுவரை 23 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைஅதில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை டூ மைசூரு இடையில் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு சென்னை டூ கோவை இடையில் இரண்டாவது ரயில் சேவை தமிழகத்திற்கு கிடைத்தது. இந்நிலையில் மூன்றாவது ரயில் சேவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுமலையானுக்கு 5 டன் பூக்கள்​சேலம் டூ திருப்பதி; வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக 5 டன் பூக்கள் அனுப்பி வைப்பு!​சென்னை டூ திருப்பதி ரயில்அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வரும் ஜூலை 7ஆம் தேதி பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேநாளில் கோரக்பூர் முதல் லக்னோ வரை, ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரை என மொத்தம் 3 ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனத் தெரிகிறது.
​தமிழக மக்கள் மகிழ்ச்சிஇந்த மூன்று ரயில்களில் தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் வகையில் இடம்பிடித்திருப்பது சென்னை டூ திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இடையில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும், கட்டண விவரம் உள்ளிட்டவை வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
​ஏழுமலையான் பக்தர்கள்சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து திருப்பதி செல்லும் பக்தர்கள் ஏராளம் இருக்கின்றனர். இவர்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து நடைபாதை வழியாகவோ அல்லது பேருந்துகள் வழியாகவோ திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வருவர்.
டிக்கெட் கட்டணம் தான் சிக்கல்​இவர்களுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். அதேசமயம் கட்டணம் அதிகமாக இருக்கும் என்பதால் சாமானியர்கள் பயணிப்பது கேள்விக்குறி தான் எனக் கூறுகின்றனர்.
​திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்புதற்போது திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை ஆவதாக திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் வெள்ளத்திற்கு சிறிதும் பஞ்சமில்லை. 60 முதல் 70 ஆயிரம் பேர் வரை தினசரி சாமி தரிசனம் செய்து விடுகின்றனர்.
வரும் ஜூலை 7 முதல்அதற்கேற்ப உண்டியல் காணிக்கையும் 3 கோடியை ரூபாயை சாதாரணமாக தாண்டி விடுகிறது. வரும் நாட்களில் விரைவாக தரிசிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் தான் ஜூலை 7ஆம் தேதியில் இருந்து சென்னை டூ திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி ஏழுமலையான் பக்தர்களை குஷியில் தள்ளியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.