சென்னை: நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது தெறி.
விஜய் இருவேறு கெட்டப்புகளில் கலக்கிய இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியிருந்தார். படத்தில் மீனாவின் மகள் நைனிகாவின் கேரக்டர் படத்திற்கு சிறப்பாக அமைந்தது.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கல் பர்பார்மென்சை நடிகர் விஜய் கொடுத்திருந்தார். அவருக்கு ஜோடிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.
தெறி படத்தை இந்தியில் தயாரிக்கும் இயக்குநர் அட்லீ: நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பேபி நைனிகா இணைந்து நடித்திருந்த தெறி படம் கடந்த 2016ம் ஆண்டில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் குவித்தது. குறிப்பாக இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியிருந்த மீனாவின் மகள் நைனிகா படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். பேபி என்று அவர் விஜய்யை அழைத்தது மிகவும் க்யூட்டாக அமைந்தது.
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் நடிகர் விஜய். படத்தில் அவருடைய கெத்து மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக வில்லனாக நடித்திருந்த இயக்குநர் மகேந்திரன் படத்தை மேலும் சிறப்பாக்கினார். அவரது வில்லத்தனம் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் மிகப்பெரிய சவாலாக அமைந்தது. மொட்டை ராஜேந்திரனின் கேரக்டரும் படத்தில் சிறப்பாக அமைந்தது. இப்படி ஒவ்வொரு கேரக்டரும் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி, பிகில் மற்றும் மெர்சல் என மூன்று வெவ்வேறு ஜானர்களில் இயக்குநர் அட்லீ ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருந்தார். இந்தப் படங்களின் மாஸ் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் அதையொட்டிய பிரம்மாண்டமான வெற்றி, தற்போது அவருக்கு பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இந்தப் படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் அட்லீ. அவரது தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் ரிலீசாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய பாரட்டுக்களை பெற்றன. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் படம் தயாரிக்கவுள்ளார் அட்லீ. விஜய் நடிப்பில் தான் இயக்கிய தெறி படத்தைதான் அவர் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார். இந்தப் படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
ஜீவா -நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான கீ என்ற படத்தை இயக்கிய காலீஸ்தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட்டில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தன்னை அடுத்தடுத்த களங்களில் முன்னேற்றிக் கொண்டுவரும் இயக்குநர் அட்லீயின் ஜவான் படம் மிகப்பெரிய தாக்கத்தை பாலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளது. படம் 1200 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.