ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Gautham Menon Vettaiyaadu Vilaiyaadu: கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் யார் என்கிற கோதாவில் லோகேஷ் கனகராஜும், கவுதம் மேனனும் மிகவும் தன்மையாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
வேட்டையாடு விளையாடுகவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த வேட்டையாடு விளையாடு படம் சூப்பர் ஹிட்டானது. பல ஆண்டுகள் கழித்து அந்த படத்தை தற்போது மீண்டும் ரிலீஸ் செய்துள்ளனர். புதுப்படங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கமலின் படம் சக்கை போடு போடுகிறது. அதை பார்த்த ரசிகர்களோ, கமல் ஹாசனின் தீவிர ரசிகர் கவுதம் மேனன் என்கிறார்கள்.
கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு ஹவுஸ்ஃபுல்!17 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரிலீஸ்!சரத்குமார்”Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு!கவுதம் மேனன்வேட்டையாடு விளையாடு தற்போதும் வசூல் வேட்டை நடத்தி வருவதை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவரோ, சிறந்த Fan Boy இயக்குநர் என்கிற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கவுதம் மேனன் சார் தான் என்று தோன்றுகிறது. இதை சொல்வதற்கு சாரி லோகி என்றார். அந்த ட்வீட் லோகேஷ் கனகராஜ் கண்ணில் பட்டுவிட்டது.
லோகேஷ் கனகராஜ்கமல் ஹாசனின் மிகப் பெரிய வெறியன் நான். அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என மல்லுக்கட்டுவார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த ட்வீட்டை பார்த்த லோகேஷோ, சந்தேகமே வேண்டாம் ப்ரோ, கவுதம் மேனன் சார் தான் என பதில் அளித்தார்.
லோகிசட்டை கிழியாதுலோகேஷ் கனகராஜ் அளித்த பதிலை பார்த்த கவுதம் மேனன் சும்மா இருக்கவில்லை. Was. நீங்களும், நாயகன் மீண்டும் வரான் வரும் வரை தான் நான். #Vikram. நான் முயற்சி செய்து அதை விட சிறப்பாக கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல சவால் லோகேஷ் கனகராஜ். ஆனால் இந்த சண்டையில சட்ட கிழியாது அன்பு மட்டுமே என தெரிவித்துள்ளார்.
பதில்அன்பும், மரியாதையும்கவுதம் மேனன் தன் மீது காட்டிய அன்பை பார்த்த லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, உங்கள் மீது நிறைய அன்பும், மரியாதையும் இருக்கிறது சார். வேட்டையாடு விளையாடு படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்றார். லோகேஷும், கவுதம் மேனனும் கமல் விஷயத்தில் இப்படி ஒன்று சேர்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
சார்ஆண்டவர்நான் கமல் ஹாசனின் தீவிர ரசிகன் என பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். நான் தான் கமலின் நம்பர் ஒன் வெறியன் என சொல்லிக் கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இப்படி கமலை யாருக்கும் விட்டுக் கொடுக்காத அவர்கள், ஆண்டவர் விஷயத்தில் இப்படி பாசமாக பேசிக் கொண்டது ரசிகர்களை கவர்ந்துவிட்டது.
ரசிகர்கள் கோரிக்கைவேட்டையாடு விளையாடு படத்தை தற்போது தியேட்டர்களில் பார்த்தவர்கள் கூறியிருப்பது ஒரேயொரு விஷயம். எப்படியாவது crowd funding செய்தாவது கவுதம் மேனனின் கடனை அடைக்க வேண்டும். என்னமா படம் இயக்கியிருக்கிறார். அவருக்கு போய் மீசை எல்லாம் ஒட்டி நடிக்க வைக்கிறார்கள். பார்க்கவே கஷ்டமா இருக்கு. அவரின் கடனை நாம் தான் தீர்க்க வேண்டும் என்கிறார்கள். மேலும் கமல் ஹாசனை வைத்து கவுதம் மேனன் மீண்டும் படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.