சென்னை: Maaveeran Trailer (மாவீரன் ட்ரெய்லர்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் வரிசையில் இணைந்துவிட்டார். மேலும் சிவகார்த்திகேயனை நம்பி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போடலாம் என்ற நம்பிக்கையும் கோலிவுட் தயாரிப்பாளர்களிடம் உருவாகியிருக்கிறது.
சறுக்கிய பிரின்ஸ்: ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும் விதமாக பிரின்ஸ் படத்தின் ரிசல்ட் அமைந்தது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை வளர்க்கும் நோக்கத்தில் அனூதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அவரது கரியரில் மோசமான தோல்வி படங்களின் வரிசையில் இணைந்தது. மேலும் ரிலீஸான ஒரே வாரத்தில் படமும் திரையரங்குகளிலிருந்தும் தூக்கப்பட்டது.
சிவகார்த்திகேயனின் மாவீரன்: இப்படிப்பட்ட சூழலில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ் கொடுத்த மோசமான அனுபவத்தை மாவீரன் மூலம் மறக்கலாம் என்ற நம்பிக்கையில் அவரும் அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்திலிருந்து மொத்தம் இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. கடைசியாக வெளியான வண்ணாரப்பேட்டையில பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பாடலை சிவகார்த்திகேயனும், அதிதி ஷங்கரும் பாடியிருக்கின்றனர்.
ட்ரெய்லர்: இந்நிலையில் மாவீரன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை பார்க்கும்போது படத்தில் சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் உள்ளவர் என்றும்; ஓவியர் என்றும் தெரிகிறது. மேலும் ஏதோ ஒரு பவர் அவரை இயக்குவதுபோலவும் காட்சிகள் இருக்கின்றன. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் சிவா வேற லெவலில் இருப்பதாகவும் நிச்சயம் படம் மெகா ஹிட் ஆகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.முன்னதாக ட்ரெய்லர் முதலில் 7 மணிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்ததுது. ஆனால் தொழிநுட்ப கோளாறு காரணமாக 8 மணிக்கு வெளியானது.
அடுத்டஹ் படம்: மாவீரன் படத்தில் நடித்து முடித்த பிறகு கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவா.ரங்கூன் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான பூஜை சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மேலும் காஷ்மீரில் முக்கால்வாசி படத்தை ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது.