சென்னை: பிரபல நடிகருக்கு அந்தரங்க பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளதாக பாலிவுட் பிரபலம் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.
அந்த நடிகருக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்த நடிகர்கள் எல்லாம் பேரன் பேத்தியே எடுத்து விட்டனர். இன்னமும் சிங்கிளாகவே அந்த நடிகர் சுற்றிக் கொண்டிருக்க அவருக்கு இருக்கும் அந்த பிரச்சனை தான் காரணம் என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர்.
பல முன்னணி நடிகைகள் நடிகரை பார்த்த உடனே காதல் வலையில் விழுந்தாலும், அவருக்கு இருக்கும் பிரச்சனை காரணமாகவே அவரை விட்டு விலகிச் சென்று விட்டனர் என்று பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது பிரபலம் பத்தவைத்த விஷயம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
தொடர்ந்து சொதப்பல்: முன்பெல்லாம் அந்த நடிகர் நடிக்கிறார் என்றால், அவருக்காகவே ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் படத்தை பார்த்து வந்தது. ஆனால், சமீப காலமாக அவர் நடித்து வரும் படங்கள் பார்க்கவே ரொம்ப போராகவும் அட்டு ஃபிளாப் படங்களாகவும் மாறி உள்ளன.
ஆனாலும், தொடர்ந்து தயாரிப்பாளர்களின் காசை கரியாக்க பெரிய பட்ஜெட் படங்களிலேயே அதிக சம்பளத்தை வாங்கிக் கொண்டு அந்த நடிகர் நடித்து வருவதாக தயாரிப்பாளர்களே புலம்பி வருகின்றனர்.
கல்யாணமே ஆகல: ஏகப்பட்ட நடிகைகளுடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்த அந்த நடிகர் பல வழக்குகளிலும் சர்ச்சைகளிலும் கூட சிக்கினார். 60 வயதை நெருங்கி உள்ள நிலையிலும், இன்னமும் அந்த நடிகர் திருமணம் செய்துக் கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
அவருக்கான சரியான மணமகள் மாட்டவில்லை என்றே அவரை சுற்றியுள்ளவர்கள் திருமணத்தை அந்த நடிகர் தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
ஆண்குறியில் பிரச்சனையா: இந்நிலையில், நடிகர் இத்தனை ஆண்டுகள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க காரணம் அவரது ஆண்குறியில் உள்ள பிரச்சனை தான் என புது குண்டை பாலிவுட் பிரபலம் ஒருவர் தூக்கிப் போட்டு பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
சமீபத்தில், கூட இளம் நடிகை ஒருவர் அந்த ஹீரோவை காதலித்து செட்டில் ஆகி விடலாம் என நினைத்த நிலையில், அவருக்கு இருக்கும் பிரச்சனையை புரிந்துக் கொண்டு அதற்கு வெளிநாட்டில் தீர்வு இருக்கு என ஆலோசனை கூறியுள்ளாராம். அதை கேட்டு ஆனந்தமடைந்து தான் தற்போது அந்த நடிகர் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் என அந்த பிரபலம் பேசியிருப்பது நடிகரின் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.