திருச்செந்தூரில் திடீரென நடந்த வினோதம்.. திகைத்து போன பக்தர்கள்.. அப்படியே மாறிய காட்சிகள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வங்ககடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. அத்துடன் அலைகள் எதுவுமே இல்லாமல் குளம் போல் காட்சி அளித்ததால் பக்தர்கள் திகைத்து போனார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு ஆகும். கடற்கரை அருகில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளதால், இந்த புண்ணிய தலத்திற்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீர் ஆடிவிட்டே, சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.

பொவதுவாக திருச்செந்தூர் பகுதியில் கடலானது அமாவாசை, பௌர்ணமி தினங்களில் உள்வாங்குவதும், சில மணி நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கம் ஆகும்.

அப்படித்தான் நேற்று முன்தினம் பௌர்ணமி என்பதால் கோவில் கடலானது சுமார் 100 அடி தூரம் சட்டென உள்வாங்கியது. இதனால் கடலின் அடியில் இருந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறை மீது ஏறிக்கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுமார் 100 அடி கடல் உள் வாங்கியதால் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலையிலும் சுமார் 50 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியே காணப்பட்டது. இதனால் நேற்று காலையிலும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் நேற்று மதியம் கடல் தண்ணீர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

A miracle in the sea near Tiruchendur Subramanya Swamy Temple

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி எனும் ஆழிப்பேரலை தமிழகத்தின் கடற்கரை சார்ந்த கிராமங்களில் உள் புகுந்தது. வீரபாண்டியன்பட்டணம், அமலி நகர், மணப்பாடு, பெரிய தாழை, கூடுதாழை, கூட்டப்பனை, இடிந்தகரை, உவரி, பெருமணல் ஆகிய கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதைப்போல கன்னியாகுமரி சுற்றியுள்ள கிராமங்களில் சுனாமியின் பாதிப்பு பெருமளவில் இருந்தது. ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் மட்டும் சுமார் 200 அடி தூரம் கடல் உள்வாங்கி அப்போது ஆச்சர்யம் அளித்தது. அப்போது பக்தர்கள் பலர் ‘கடல் காத்த கந்தன்’ செயல் என்று நெகிழ்ந்தனர்.

அதேநேரம் சுமத்ரா தீவிலிருந்து புறப்பட்ட சுனாமி அலைகளிலிருந்து திருச்செந்தூரை காத்து நின்றது இலங்கை, அலையின் வேகத்தை இலங்கை வாங்கி கொண்டது. ஆகவே எதிர் விளைவாக கடல் உள்வாங்கியது என்று விஞ்ஞான ரீதியாக சொல்கிறார்கள்

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.