6 முதல் 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்… இன்னும் நான்கு நாட்கள் தான்!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேற்பார்வையில் பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ’மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற தமிழக அரசின் முன்னோடி திட்டத்தின் கீழ் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

​பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுஅதாவது, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை கைகோர்த்து செயல்படுத்த உள்ளது.​வினாடி வினா போட்டிஅதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வரும் 10.07.2023 முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும். இதையொட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், உயர் தொழில்நுட்ப ஆய்வக ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கு இணைய வழி பயிற்சி வழங்க வேண்டும்.CEOக்களுக்கு அறிவுறுத்தல்இதனை 07.07.2023 மாலைக்கு நடைபெறுவதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உறுதி செய்ய வேண்டும். இந்த பயிற்சியானது உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் மட்டுமே நடத்த வேண்டும். ஒருவேளை உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்பட்டால், வினாத்தாள்கள் தயாரிக்கும் போது சிக்கல்கள் வந்தால் அதற்கு தீர்வு கான 14417 என்ற இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம்.
​ஆசிரியர்களுக்கு புலமைஇதுபற்றி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேற்கண்ட வகையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க வேண்டும். இந்த ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த புலமை பெற்றிருப்பதை உறுதி செய்வது அவசியம்.
உயர் தொழில்நுட்ப ஆய்வகம்இதுபோன்ற வினாடி வினா அல்லது வளரறி மதிப்பீடுகள் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக இனி வரும் நாட்களில் தொடர்ச்சியாக நடைபெறும். இதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆப்சென்ட்​ மாணவர்களுக்கு வாய்ப்புவினாடி வினா போட்டிகளுக்கான தேதிகளை பொறுத்தவரை, 6ஆம் வகுப்பிற்கு ஜூலை 10, 7ஆம் வகுப்பிற்கு ஜூலை 11, 8ஆம் வகுப்பிற்கு ஜூலை 12, 9ஆம் வகுப்பிற்கு ஜூலை 13 ஆகிய நாட்களில் நடத்தப்படும். ஆப்சென்ட் ஆனா 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி வினாடி வினா போட்டிகள் நடத்தப்படும்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரைஇதையடுத்து 10ஆம் வகுப்பிற்கு ஜூலை 17, 11ஆம் வகுப்பிற்கு ஜூலை 18 மற்றும் 19, 12ஆம் வகுப்பிற்கு ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.