சென்னை: நெருக்கமான காட்சியில் நடிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் என்று நடிகை பிரியா மணி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழின் மிகவும் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை பிரியா மணி. இவரை இப்போது அதிகமான தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும் பிற மொழிபடங்களில் நடித்து வருகிறார்.
கார்த்தியின் அறிமுகப்படமான பருத்தி வீரன் படத்தில் முத்தழகாக வாழ்ந்து தேசிய விருதை பெற்ற பிரியா மணி தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக உள்ளார்.
திருமணம் செய்தார்: நடிகை பிரியா மணி அறிமுகமானதே பாரதிராஜா இயக்கத்தில்தான். அதைத் தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக சாருலதா என்ற படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். அதன் பின் 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன இவர், தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டார்.
அடுத்தடுத்தப் படங்களில்: இதையடுத்து, மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பேமிலி மேனில் நடித்து பாராட்டை பெற்ற பிரியா மணி தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் நாகசைத்தன்யா நடித்த கஸ்டடி படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
கணவருக்கு பதில் சொல்லனும்: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா மணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் திரைப்படத்தில் நான் படுக்கை அறை காட்சியிலோ, நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியிலோ நடிக்க மாட்டேன். ஏன் என்றால் என் படத்தை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், படம் பார்க்கும் போது அவர்களின் முகம் சுளிக்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல் அப்படி நடித்தால் என் கணவருக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும்.
கன்னத்தில் முத்தம் கொடுக்க ஓகே: மேலும், இதுபோன்ற விவகாரமான காட்சியில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், கன்னத்தில் முத்தம் கொடுப்பது என்றால் ஓகே தான் மற்ற நெருக்கமான காட்சிகள் வந்தால் முடியாது என்று முதலிலேயே சொல்லி விடுவேன் ஏன் என்றால், குடும்பத்தினர் அசௌகரியமாக உணர்வதை நான் விரும்பவில்லை என்றார்.