கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தை (சதொச) தாபிக்கப்பட்டதன் நோக்கம் அடையப் பெறாமை, இந்நிறுவனத்தால் பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிப்புக்கள் கிடைக்காமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு சதொச நிறுவனத்தை மீள்கட்டமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தை (சதொச) மீள்கட்டமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நெறிப்படுத்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்து உத்தேச மீள்கட்டமைப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக வணிக, வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.