தமன்னா ஐட்டம் டான்சராக மாறியதே அதற்குத்தான்..உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை: ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கத்தான் தமன்னாவை இவ்வளவு கவர்ச்சியாக ஆடவிட்டு இருக்கிறார்கள் என்று சினிமா பத்திரிக்கையாளர் ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

நடிகை தமன்னா ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாக உள்ளது.

ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா பாடல் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார்.அந்த பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர்: , இந்நிலையில் பத்திரிக்கையாளரான சினிமா ராமானுஜம் நமது பிலிமி பீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினிக்கு தற்போது 73வது ஆனாலும் அவர், எவர் கிரீன் நாயகனாகவே இருக்கிறார். அவர் காதலித்தாலும், ரொமான்ஸ் பார்த்து ரசிப்பதற்கு என்று தனிக்கூட்டம் இருக்கிறது. இதனால், இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தில் அவரை இளமையாக காட்ட முயற்சி செய்து இருக்கிறார் அதன் வெளிப்பாடு தான் காவாலா பாடல்.

வெற்றிப்படமாக்க: மேலும் ரஜினி என்கிற ஒன்றை மனிதரை வைத்து படத்தை ஜெயித்துவிட முடியாது என்பதால் தான் தமன்னாவை இவ்வளவு கவர்ச்சியாக ஆடவிட்டு இருக்கிறார்கள். புஸ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா கவர்ச்சியாக ஆடி வைத்து படத்தின் வசூலை உயர்த்தினார்களோ அப்படித்தான் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலும் பார்க்கப்படுகிறது.

நம்பர் ஒன் இடத்தை பிடிக்க: மேலும் தமன்னாவை அழு மூச்சியாகத்தான் தமிழ் சினிமா பார்த்து இருக்கிறது. அவரை வேறு ஒரு தோற்றத்தில் காட்டிய திரைப்படம் பையா. அந்த படத்தில் தமன்னா ஒரு அழகு பதுமையாக இருப்பார்.அதன் பின் விஜய், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும் அவருக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தார். இதனால், சினிமாவில் ஜெயிப்பதற்கு, நம்பர் ஒன் நடிகையாக இருப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல முடிவு செய்துவிட்டார். அதன் விளைவுதான் படுக்கை அறை காட்சி, முத்தக்காட்சியில் நடிப்பதற்கு காரணம்.

அதே அழகுடன்: தமன்னாவுக்கு வயசு ஆனாலும்,இன்னும் அதே அழகுடனே அவர் இருப்பதால், இன்றைய 2கே கிட்ஸ்களும் அவர் மீது க்ரஷாக இருக்கிறார்கள். இதனால், ஐஸ்வர்யா ராய் போல தமன்னா மிகப்பெரிய இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா பத்திரிக்கையாளர் ராமானுஜம் அந்த பேட்டியில் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.