மதுரை ஜிகர்தண்டா; ராமேஸ்வரம் முருகன் மெஸ்; சோழர்களின் சிந்தனை – ராஜமெளலியின் தமிழ்நாடு ட்ரிப்!

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என பிரமாண்டப் படங்களின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி.

ஆஸ்கர், ஹாலிவுட், வெளிநாட்டுப் பயணம் என்று சுற்றிக் கொண்டிருந்த ராஜமெளலி, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டு கோயில்களுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அந்த தமிழ்நாட்டு சுற்றுப்பயணத்தில் கும்பகோணம், தஞ்சை, மதுரை, தூத்துக்குடி என பல கோயில்களுக்குச் சென்றுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உணவுகளையும், மதுரை ஜிகர்தண்டா மற்றும் சில கடைக்களையும்கூட குறிப்பிட்டு உணவு அருமையாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.

ராஜமெளலியின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணம்

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமெளலி,” தமிழ்நாட்டிற்கு நீண்ட நாட்களாக சுற்றுலாப் பயணம் செல்ல விரும்பினேன். என் மகள் கோயில்களுக்குச் செல்ல விரும்பினாள். அதனால் தமிழ்நாட்டு கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டோம். என் மகளுக்கு நன்றி. ஜூன் கடைசி வாரத்தில் ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றோம். நேர்த்தியான கட்டிடக்கலை, அற்புதமான பொறியியல் மற்றும் பாண்டியர்கள், சோழர்கள் நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனை மெய்சிலிர்க்க வைத்தது.

ஆனால், சில நாட்களில் அவற்றை பற்றி மேலோட்டமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடிந்தது. மந்திரக்கூடம், கும்பகோணம், ராமேஸ்வரத்தின் முருகன் மெஸ் என எல்லா இடங்களிலும் உணவு அருமையாக இருக்கும்… ஒரு வாரத்தில் 2-3 கிலோ எடையை அதிகரித்திருக்க வேண்டும். 3 மாத வெளிநாட்டு பயணம் மற்றும் உணவுக்குப் பிறகு, இந்த தாயகம் சுற்றுப்பயணம் புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.