சென்னை: Jawan (ஜவான்) ஜவான் படத்துக்காக அட்லீ வாங்கியிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழில் ஆர்யாவை வைத்து ராஜா ராணி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.
படத்தின் ரிலீஸ் தேதி: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முதலில் ஜூன் இரண்டாம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று காலை 10.30 மணிக்கு வெளியானது.
எப்படி இருக்கு ட்ரெய்லர்: படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் பேக்கேஜாக உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. அதேபோல் ஷாருக்கான் ட்ரெய்லரில் பேசும் வசனங்களை கேட்கும்போது அவர் இந்தப் படத்தில் ஹீரோவா இல்லை நெகட்டிவ் ஷேடில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும் நயன்தாரா, ப்ரியாமணி என பலரும் ஆக்ஷனில் பின்னி எடுத்திருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள்வரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
விமர்சனம் செய்யும் ரசிகர்கள்: ட்ரெய்லர் எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்பட்டதோ அதேபோல் விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக ட்ரெய்லரில் குழந்தையை தூக்கி காட்டும் காட்சி பாகுபலியையும், மெர்சலையும் போல் இருக்கிறது, அம்மாவுக்கு செய்த சத்தியம் என்று வசனம் வரும்போது கேஜிஎஃப் நினைவுக்கு வருகிறது என்றெல்லாம் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர் ரசிகர்கள்.

சம்பளம் எவ்வளவு?: இப்படி கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ட்ரெய்லர் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை 50 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. இந்நிலையில் ஜவான் படத்துக்காக அட்லீ பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்காக அவர் 35 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது.
அடுத்தடுத்த ஹிந்தி புராஜெக்ட்: இதற்கிடையே அட்லீ மும்பையில் 38 கோடி ரூபாய்க்கு சொகுசு ஃப்ளாட் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதற்கு காரணமாக இனி ஹிந்தியில் அட்லீ கவனம் செலுத்தவிருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்தை முடித்துவிட்டு தெறி படத்தை அட்லீ ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகிறார் என்றும் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.