உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் “Glocal Fair 2023” உடன் இணைந்து பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்போது யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று சட்டவிரோத ஆள் கடத்தலைத் தடுப்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.