வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பியாங்யாங்: ஜப்பான் கடல்பகுதியில் அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் எச்சரிகையை மீறி வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது.
![]() |
இந்நிலையில் இன்று அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை ஜப்பான் கடல்பகுதியில் நிகழ்த்தியுள்ளதாகவும், இந்தாண்டில் இதுவரை 12 ஏவுகணைகளை ஏவி சோதனை நிகழ்த்தியுள்ளதாகவும் தென்கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணை ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement