Vijay: ஷங்கரின் அரசியல் படத்தில் நடிக்கும் விஜய்: தளபதியை விடாது அரசியல்

Thalapathy 69: தளபதி 68 படத்தை அடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என கேட்ட ரசிகர்களுக்கு பதில் கிடைத்திருக்கிறது.

​விஜய்​Leo: லியோ ஷூட்டிங்கை முடித்த விஜய்: அப்படி இருந்த தளபதி இப்படி மாறிட்டார்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார். தளபதி 69 படத்தை இயக்கப் போவது யார் என ரசிகர்கள் ஏற்கனவே கேட்கத் துவங்கிவிட்டார்கள். தளபதி 68 படமே இன்னும் ஆரம்பிக்கவில்லை அதற்குள் அடுத்த படம் குறித்து கேட்பதா என சில ரசிகர்கள் கடுப்பாகவும் செய்தார்கள். இந்நிலையில் தான் அவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.உதயநிதி ஸ்டாலின்​திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!!​​​ஷங்கர்​தளபதி 69 அல்லது தளபதி 70 படத்தை பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். விஜய்யிடம் ஒன்லைனர் சொன்னாராம் ஷங்கர். அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அரசியலுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார் விஜய். இந்நிலையில் விஜய்யை வைத்து அரசியல் த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் ஷங்கர்.
​விஜய் பட வேலை​ஷங்கர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இரண்டு படங்கைளயும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன் பிறகு விஜய் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையை துவங்குவாராம் ஷங்கர். நண்பன் படத்தை அடுத்து மீண்டும் ஷங்கர், விஜய் கூட்டணி சேரவிருக்கிறது.
​முதல்வன்​ஷங்கர் இயக்கத்தில் வெளியான அரசியல் படமான முதல்வனில் நடிக்க விஜய்யிடம் கேட்டார். ஆனால் அந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. இதையடுத்தே தற்போது மீண்டும் அவரை தேடி அரசியல் படம், அதுவும் ஷங்கர் படம் வந்திருக்கிறது. ஷங்கர் படத்தில் அரசியல் பேசினால் அது மிகவும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
​வருத்தம்​சொந்த கதையை படமாக்குவதற்கு பெயர் போன ஷங்கர் போய் விஜய்யை வைத்து 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்தாரே. ஒரு சொந்தக் கதையில் விஜய்யை நடிக்க வைத்திருந்தால் மாஸாக இருந்திருக்குமே என சினிமா ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். அவர்களின் வருத்தம் விரைவில் தீரப் போகிறது. ஷங்கரின் சொந்தக் கதையில் நடிக்கப் போகிறார் விஜய்.
​அரசியல்​Vijay: மக்கள் சேவை செய்ய நடிப்புக்கு முழுக்கு போடுவதில் சீரியஸாக இருக்கும் விஜய்அரசியலுக்கு வரும் ஐடியாவில் இருக்கும் விஜய் தன் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று பனையூரில் சந்தித்து பேசினார். அந்த கூட்டத்தில் 234 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். நான் அரசியலுக்கு வரும் நேரம் வந்ததும் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என விஜய் தெரிவித்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

​விரைவில்….​முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சென்னைக்கு அழைத்து கவுரவித்தார் விஜய். அது அவர் அரசியலுக்கு வருவதை தெரிவிக்கும் விதமாக நடந்த நிகழ்ச்சி என்று பேசப்பட்டது. அரசியலுக்கு வருவதில் தீவிரமாக இருக்கிறாராம் விஜய். அவரை அரசியல் களத்தில் பார்க்க வேண்டும் என்கிற எஸ்.ஏ.சந்திரசேகரின் கனவு நிறைவேறப் போகிறது.

​Ajith: என்னிடம் வாங்கிய பணத்தை அஜித் இன்னும் திருப்பித் தரல: வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.