சிகாகோ நகரை சுழன்றடித்த சூறாவளி… வானில் வந்த பெரிய சிக்கல்… பலமாக ஒலித்த சைரன்!

அமெரிக்காவின் சிகாகோ நகர் மிக மோசமான வானிலையை சந்தித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு சூறாவளிகள் தாக்கியுள்ளன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் 8 சூறாவளிகள் சிகாகோ நகரில் சுழன்றடித்து பீதியை கிளப்பியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சூறாவளி காற்றில் சிக்கி பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்: இருவர் மீட்பு

சிகாகோவில் சூறாவளி தாக்குதல்

வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தற்போது தாக்கிய சூறாவளிகள் மிகப்பெரிய மற்றும் மிக மிக தீவிரமானவையாக இருக்கின்றன என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நாளைக்கு ரூ.2.38 லட்சம் வருமானம்… சிங்கப்பூரில் மாஸ் காட்டும் அந்த ஒரு மதுபான வகை!

ஓஹரே விமான நிலையம் மூடல்

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன. பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் சிகாகோ நகர் முழுவதும் சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்நிலையில் சிகாகோ நகரில் உள்ள ஓஹரே சர்வதேச விமான நிலையம் மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து

அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஓஹரே விமான நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய 300 விமானங்களும், நடுவானில் பறந்து கொண்டிருந்த 32 விமானங்களும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள விமான நிலையங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

வானிலை மையம் எச்சரிக்கை

விமானத்திற்காக வருகை புரிந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஓஹரே விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில் சூறாவளி தாக்கியதில் விமான நிலையத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தகட்டமாக இரண்டு சூறாவளிகள் தாக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சீன கிண்டர்கார்டன் பள்ளியில் சரமாரி கத்திகுத்து… குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலி!

வரலாற்றில் பதிவான சூறாவளி

சிகாகோ நகரில் சூறாவளிகள் தாக்குவது புதிதல்ல. கடந்த 1855 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் 92 சக்தி வாய்ந்த சூறாவளிகள் தாக்கியுள்ளன. இதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் தாக்கியது தான். ஓக் லானில் இருந்து சிகாகோ வரை 26 கிலோமீட்டர் தூரம் சூறாவளி பயணித்தது.

உயிரிழப்பும், பாதிப்பும்

இதில் 33 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 50 மில்லியன் டாலர் அளவிற்கு சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது சிகாகோ நகரை தாக்கியுள்ள 8 சூறாவளிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வரும் நாட்களில் தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.