91 வருட வரலாற்றில் இந்தியா புதிய சாதனை… பட்டையை கிளப்பிய ரோஹித் – ஜெய்ஸ்வால் காம்போ!

West Indies vs India: ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி புதிய வரலாற்றை படைத்தது. 91 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடக்காத சாதனையை இந்திய அணி செய்துள்ளது. இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை 1932ஆம் ஆண்டு விளையாடியது. 1932ஆம் ஆண்டு முதல் இதுவரை, இந்தியா எந்த விக்கெட்டையும் இழக்காமல் எதிர் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை வீழ்த் தாண்டியதில்லை. ஆனால், இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்த வரலாற்றை படைத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், போட்டியின் டாஸை மேற்கிந்திய தீவுகள் அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணியை முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அஸ்வின் இதில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் – ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பான ஓப்பனிங் பார்டனர்ஷிப்பை அமைத்தனர். முதல் நாள் முடிவில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை குவித்திருந்தது. அப்போது ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோஹித் 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதையடுத்து, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்திலும், இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் சதத்தை கடந்து விக்கெட் இழப்பின்றி 229 ரன்கள் எடுத்தனர். அதாவது, மேற்கிந்திய தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விக்கெட் இழப்பின்றி தாண்டி, 79 ரன்கள் முன்னிலையை பெற்றது. அப்போது ரோஹித் சர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

 

 Milestone Alert 

up & going strong @ImRo45 and @ybj_19 now hold the record of the highest opening partnership for India against West Indies in Tests

Follow the match https://t.co/FWI05P4Bnd#TeamIndia | #WIvIND pic.twitter.com/16Ok0G8ZpV

— BCCI (@BCCI) July 13, 2023

இதன்மூலம், முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி எதிரணியின் ஸ்கோரை தாண்டி இந்திய அணி அபார சாதனை படைத்தது. 1932ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான 91 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரின் சதங்கள் மற்றும் இருவரின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பின் மூலம் இந்தியா வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்களை எடுத்தது. தற்போது இந்தியா 162 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. தற்போது ஜெய்ஸ்வால் 143 ரன்களிலும், விராட் கோலி 36 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இருவரும் இதுவரை 3வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்துள்ளனர். இந்திய அணியால் நேற்றைய (இரண்டாம் நாள் ஆட்டம்) 90 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஜெய்ஸ்வால் இதற்கு முன்பு ரோஹித்துடன் (103) முதல் விக்கெட்டுக்கு 229 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பகிர்ந்து கொண்டார். இது ஆசியாவிற்கு வெளியே இந்தியாவின் மிகப்பெரிய முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாகும். ஆகஸ்ட் 1979இல் ஓவலில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்த சேத்தன் சௌஹான் மற்றும் சுனில் கவாஸ்கர் ஜோடியை இந்த ஜோடி முறியடித்தது. ஜெய்ஸ்வால் இதுவரை 350 பந்துகளை எதிர்கொண்டு இன்னிங்ஸில் 14 பவுண்டரிகள் அடித்துள்ளார். ரோஹித்தின் 221 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை அடித்தார். கோஹ்லி இதுவரை 96 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.